Saturday, October 27, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 5

இந்த பூமியை அந்தரத்தில் நிலைநிறுத்தியிருக்கிற சக்தியைத் தான் நாம் அல்லா என்கிறோம். Earth இல்லாத போது கிரகங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு அணுவெடிப்பு ஏற்பட்டு எண்ணற்ற சூரிய மண்டலங்கள் உருவாக காரணமான சக்தியையே அல்லா என்கிறோம். பயிரைக் காக்க மழையை அனுப்புபவனையே நாம் அல்லா என்கிறோம். அல்லாவின் விருப்பப்படியே சூரியன் உதிக்கிறது. அல்லாவின் விருப்பப்படியே நிலவு தோன்றுகிறது. அல்லாவுக்கு தெரியாமல் இந்த உலகத்தில் ஒரு மரத்திலிருந்து இலை கூட கீழே விழமுடியாது. உலகமே மெக்காதான் அல்லாவின் வீடு தான் இந்த உலகம். இறையச்சம் கொண்டிருந்தால் உலகில் நீங்கள் எங்குமே அல்லாவைப் பார்க்கலாம்.
மனிதனின் முடிவு அல்லாவின் கையில் உள்ளது. அல்லாவின் உத்தரவின்படி தனக்கு கொடுக்கப்பட்ட கடமையைச் செய்து முடிக்கும் உயிர்கள் திரும்ப அல்லாவிடம் அழைக்கப்படும். அல்லா தன் படைப்புகளில் உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை. மனிதர்கள் பணத்தையே பார்ப்பார்கள். அல்லா உள்ளத்தையே பார்ப்பான். அல்லா ஒருவன் மட்டுமே கற்பனைக்கு எட்டாத, யாராலும் அறிய முடியாத , பிரபஞ்ச இயக்கத்துக்கு மூலகாரணமாய் இருக்கும் கடவுள். அல்லா ஒருவனிடம் மட்டுமே சர்க்கார் சட்டம் கூட செல்லுபடியாகாது.
அல்லா சிந்தனைக்கு அப்பாற்பட்ட கடவுள் இன்ன விதமாக என அறுதியிட்டுக் கூடி முடியாத கடவுள். மரணத்தில் உயிர்களுக்கு புரிந்துவிடும் அல்லா ஒருவன் மட்டுமே தேவன் என்று. மன்னிக்கும் மனப்பான்மை உன்னிடம் இல்லையென்றால் அல்லா உங்கள் மீது கருணை கொள்ளமாட்டான். அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் அல்லாவின் பிரதிநிதிகள் தான். நீங்கள் உருவாக்கிய கடவுளர்கள் உங்களிடமிருந்தே சக்தியைப் பெற்றுக் பெற்றுக் கொள்கின்றன, அல்லா அப்படி அல்ல. அநீதிக்கு எதிராக ஒலிக்கும் ஒவ்வொரு குரலும் அல்லாவின் குரல் தான். அல்லாவிடம் இருக்கும் பயத்தினால்தான் இந்த உலகில் சிறிதளவேனும் அறம் நிலைத்துள்ளது.
நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை இந்த உலகம் அல்லாவின் பள்ளிக்கூடம் தேர்ச்சி பெற்றீர்களா இல்லையா என்பதை மறுமை நாளில் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உலாவிக் கொண்டிருக்கிறீர்கள். அல்லா பிறக்கவுமில்லை இறக்கவுமில்லை என்றும் நிலையாய் இருக்கிறான். வாழ்க்கையில் நேர்மையை நாடுபவர்கள் அல்லாவால் விரும்பப்படுபவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். எல்லா வழிகளும் மூடப்பட்டாலும் அல்லா உனக்காக ஒரு கதவை திறக்கப்பண்ணுவார். மாயையான இந்த உலகிற்கு முக்கியம் அளித்து இச்சைக்கு ஆட்படுவீர்களானால் அல்லாவிடமிருந்து யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. மற்ற மதக்காரர்களும் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் அல்லா ஒருவனே கடவுள் என்று.

No comments:

Post a Comment