Tuesday, October 23, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 3

அல்லா பூமிக்கு குழந்தைகளை அனுப்புகிறான். சின்னஞ்சிறு மலர்களை பேணிப் பாதுகாப்பதற்கு தாய், தந்தை என்ற இரண்டு தேவதைகளை அளித்திருக்கிறான். சூரிய வெளிச்சத்தில் திருடலாம், பிறருக்கு உதவும் காரியங்களையும் செய்யலாம். நம் செயலுக்கு சூரியன் பொருப்பாகாது அது போன்றவன் தான் அல்லா. அல்லா உனக்கு சூழ்நிலைகளை அமைத்துத் தருகிறான். அதற்கு நீ எப்படி செயலாற்றுகிறாய் என்று பார்க்கிறான். இந்தப் பூமி அல்லாவின் தோட்டம். வந்து போகும் உயிர்கள் அதனை பார்த்து ரசிக்கலாம் பூக்களை பறிக்க அவன் அனுமதி அளிப்பதில்லை.
முகமதியர்கள் தங்கள் வாழ்க்கையில் சத்தியத்துடன் நடக்க முற்படுவது சுவனத்துக்காக அல்ல அல்லாவுக்காக. அல்லா நபியிடமிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல். இந்த காலகட்டத்தில் சில நபர்களின் மூலம் அல்லா தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். பணத்தின் பின்னால் ஓடும் சமூகம் அவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. மற்ற மதங்கள் குட்டையாகவும், குளமாகவும் தான் உள்ளது. இஸ்லாம் மட்டுமே கடலாக உள்ளது. சத்தியத்தை நீங்கள் இஸ்லாத்தில் மட்டுமே கண்டடைய முடியும்.
மற்ற மதங்களில் புனித நூல்கள் கூடி வருவதை தங்களுக்கேற்றவாறு வளைத்துக் கொள்கின்றனர். மனித வாழ்வின் நெறிமுறைகள் அடங்கிய குர்ஆன் அல்லாவின் குரலாக இன்றும் உலகில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மனம் போன போக்கில் வாழ்பவர்கள் மறுமை நாளில் அல்லாவை சந்திக்கும் போது நடுநடுங்கிப் போவார்கள். நீங்கள் தர்க்காக்களில் புறாக்களைப் பார்க்கலாம் சுதந்திரமாக பறந்து திரியும் அவைகளைப் போல மனிதர்களுக்கும் அல்லா சுதந்திரம் வழங்கி இருக்கிறான். அலைகளும் அல்லாவின் கட்டளைப்படியே எழும்புகிறது. காற்றும் அல்லாவுக்கே கட்டுப்பட்டே நடக்கிறது.
நீங்கள் யாருக்கு துரோம் இழைக்கின்றீர்களோ அவர்கள் மன்னித்தால் தான் அல்லா உங்களை மன்னிப்பான். மற்ற தெய்வங்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போல அல்லா ஒருவன் மட்டுமே சூரியன். கெட்ட காரியம் பண்ணிவிட்டு அல்லாவிடம் மன்னிப்பை எதிர்பார்க்காதீர்கள். அல்லா மட்டுமே மனிதர்களிடம் பேதம் பார்க்காதவன். சாமானியருக்கும், சக்கரவர்த்திக்கும் ஒரே மரணச்சட்டம் தான். அதனை பூமியில் அமல்ப்படுத்துகிறவனே அல்லா. யாருடைய சிபாரிசையும் ஏற்று அல்லா யாருக்கும் விதிவிலக்கு அளிப்பதில்லை. வானாகவும், மண்ணாகவும், காற்றாகவும், கடலாகவும், நெருப்பாகவும், நீராகவும் அல்லா தான் இருக்கிறான். பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அல்லாவிடமே இருக்கிறது. சத்தியத்தின் மீறி நடக்கும் எந்த மதமும் அல்லாவின் சட்டப்படி இப்பூமியிலிருந்து அகற்றப்படும். மெக்காவை நோக்கி வணங்குகிறேன். அல்லாவின் அரசாட்சியில் நீதி நிலைபெறட்டும்.

4 comments:

 1. "மற்ற மதங்களில் புனித நூல்கள் கூடி வருவதை தங்களுக்கேற்றவாறு வளைத்துக் கொள்கின்றனர். மனித வாழ்வின் நெறிமுறைகள் அடங்கிய குர்ஆன் அல்லாவின் குரலாக இன்றும் உலகில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. "
  .
  குரான் கூறும் வழியை முழுமையாக பின்பற்றும் ஒரே ஒரு நாடு சொல்லுங்கள் பார்ப்போம்

  ReplyDelete
 2. "அல்லா உனக்கு சூழ்நிலைகளை அமைத்துத் தருகிறான். அதற்கு நீ எப்படி செயலாற்றுகிறாய் என்று பார்க்கிறான்."
  .
  நான் எப்படி செயலாற்றுகினேன் என்பது அல்லாஹ் வுக்கு முதலே தெரியாதா ?
  அதாவது என்னை படைக்கும் போதே தெரியாதா ?

  ReplyDelete
 3. "பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அல்லாவிடமே இருக்கிறது. சத்தியத்தின் மீறி நடக்கும் எந்த மதமும் அல்லாவின் சட்டப்படி இப்பூமியிலிருந்து அகற்றப்படும்."
  .
  எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் எந்த மதமும் அகலவேயில்லை
  ஆகவே அல்லாஹ் கையாலாகாத ஆளா ?

  ReplyDelete
 4. "மற்ற தெய்வங்கள் எல்லாம் நட்சத்திரங்களைப் போல அல்லா ஒருவன் மட்டுமே சூரியன். "
  .
  செம காமெடி
  அல்லாஹ் மட்டுமல்ல அல்லாவோட அடிமைகள் கூட முட்டாள் கூ... தான்

  சூரியன் கூட நட்சத்திரம் தான் என்பது 1400 வருசத்துக்கு முதல் அல்லாஹ்வுக்கு தெரிஞ்சிருக்காது
  ஹஹஹஹ
  ஆனால் அறிவியல் வளர்ந்த இந்த காலத்தில் கூட அல்லாஹ் அடிமை முட்டாள் களுக்கு தெரியாதிருப்பது செம காமெடி

  சூரியனை விட பல நூறு மடங்கு பெரிய நட்சத்திரம் கூட உண்டு

  ReplyDelete