Tuesday, October 23, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 2

மனிதன் பணத்தின் மூலம் வசதிகளைத் தேடிக் கொள்கிறான். பணத்தின் மூலம் பெண்கள் உட்பட எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிக் கொள்கிறான். இந்த உலகம் நிலையானது இல்லை என்று அவன் உணருவதில்லை. 60வயது எட்டும் வரை அவனுக்கு மரணத்தைப் பற்றிய நினைப்பே வருவதில்லை. பக்கத்து வீட்டில் மரணம் நிகழ்ந்தாலும் இறைவன் தனக்கு விதிவிலக்கு அளிப்பான் என நம்புகிறான். இஸ்லாத்தில் மட்டுமே இறையச்சம் கொண்டவர்களைக் காணலாம் மற்ற மதங்களில் காண முடியாது.
ஒரு நாளில் எத்தனை முறை நாம் இறைவனை நினைக்கிறோம். இச்சையினால் உந்தப்பட்டு படைத்த அல்லாவையே மறந்து தொலைக்கிறாய். மரணத்தை எந்த வழியில் எப்படி அல்லா அனுப்பி வைப்பான் என யாருக்கும் தெரியாது. மற்ற மதங்கள் மனிதனை மனிதனாக பார்ப்பது இல்லை. அவர்கள் விரும்புவது தன் காரியத்தை செய்கின்ற உணர்வற்ற ஜடத்தைத் தான். மற்ற மதங்களில் கோயில்களிலும், தேவாலயங்களிலும் தெய்வங்களை சிறை வைத்துள்ளனர். ஆனால் அல்லா எனும் சக்கி அனைத்துக்கும் சாட்சியாய் நிற்கிறது.
உங்கள் தெய்வம் யாசகம் கேட்பவனையும், யாசகம் கொடுப்பவனையும் ஒன்றாக மதிக்கிறதா. தரிசனத்துக்காக வரும் முக்கியஸ்தர்களை வரிசையில் நிற்கவிடாமல் அனுமதிக்கிறதா? இரண்டுக்கும் உங்கள் பதில் இல்லை தானே. அல்லா நம்புவர்கள் கஷ்டப்படும் போது அவர்களுக்கு உதவ அல்லாவே ஆட்களை அனுப்பி வைப்பான். மனிதர்கள் தோற்றத்தையும், பணத்தையும் பார்க்கும்போது அல்லா மனிதனின் மனத்தையே பார்க்கிறான். உடலால் செய்வது மட்டுமே தவறாகும் சிந்தனையால் செய்யும் தவறுக்கு தண்டனை கிடைக்காது என நினைக்கிறான். அல்லா மனிதினின் எண்ணத்தை பின்னாலிருந்து பார்க்கிறான். முகமதியர்கள் எவரும் வாக்கினாலும், எண்ணத்தினாலும், செயலாலும் முறையற்ற வழிகளில் எதிரிகளை பழிதீர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
இலையை பிடுங்கினால் மரத்திற்கு வலிக்குமே என்று நினைக்கும் கருணையாளன் தான் அல்லா. அல்லாவிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை, அடைக்கலம் தேடி வந்தவர்களை எதிரிகளிடம் சரணடைய விடமாட்டான். இந்த உலகில் நல்ல மனத்துடன் வாழும் ஒருசிலர் மூலம், அல்லா விண்ணகத்தில் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மெக்காவின் கதவுகளை பணத்திற்காகவும, பதவிக்காகவும் தட்டியவர்களே அளவிற்கதிகமாய் இருந்தனர். நபி ஒருவர் மட்டுமே சத்தியத்திற்காக தட்டினார். உலகில் அறத்தை நிலைநிறுத்த அருளப்பட்ட ஒரே வேதம் திருக்குர்ஆன். சத்தியத்தை கடைப்பிடித்து வாழ்பவர்கள் அடைக்கலம் நாடி வரும் ஒரே இடம் மெக்கா. நபி ஏற்றி வைத்த தீபத்தின் வெளிச்சத்திலே உலகைக் காணும் நாமெல்லோரும் அல்லாவை நாளில் ஒரு தடவையாவது நினைப்போமாக.

No comments:

Post a Comment