Saturday, October 20, 2018

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் - 1

இந்த உலக மக்கள் வலைகளில் மாட்டிக் கொண்ட மீன்களைப் போல கதியற்றுக் கிடந்தனர். பாவச் செயல்களுக்கு தண்டனை கிடையாது எனும் போது அப்பாவிகள் வல்லமையுள்ளவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். வாளின் முனையில் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலையே அன்றிருந்தது. உலகியல் மனிதர்கள் எந்த நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்ற உபதேசங்களை எந்த மதமும் சொல்லவில்லை.
நபியைத் தவிர எந்த இறைத்தூதராலும் மனிதனைக் கடவுளிடம் கொண்டு செல்ல முடியவில்லை. இறையச்சம் குறைந்து போய் குற்றச் செயல்களைப் புரிவோரே சமூகத்தில் பெரும்புள்ளிகளாக மதிக்கப்பட்டனர். கிருத்தவம் விடுதலை அளிக்கவில்லை விலங்கு பூட்டியது அதை உடைத்தெறிய நபி வரவேண்டி இருந்தது.
மதம் விளிம்புநிலை மக்களுக்காக இருக்க வேண்டும். தன்னைக் கடவுள் என்று நிரூபித்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை ஆடுகளாகத்தான் பார்ப்பார்கள். ஏமாறாதீர்கள் சத்தியத்தை நிலை நிறுத்த வேண்டுமென்றால் எங்கும் நிறைந்திருக்கும் அல்லாவையே நாம் தொழ வேண்டும். சிதறிய சர்க்கரையை நாடி எறும்புக் கூட்டம் ஓடி வருவதைப் போல இது ஒரு நாள் நடக்கிறதா இல்லையா எனப் பாருங்கள். மனம் போன போக்கில் வாழலாம் என்று நினைப்பவர்கள் எல்லாம் மறுமை நாளில் அல்லாவை சந்திக்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment